கோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்

கோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்

கோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்
Published on

கோவில்களின் புராதன தன்மை குறித்து அரசு மற்றும் உயர் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுக்கள் தான் ஆய்வு செய்யும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை சிறப்புக் குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. 2017 பிப்ரவரி 14 பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் இந்த உத்தரவில் கிராம கோவில்களுக்கு விலக்கு கோரி ஸ்ரீரங்கம் செண்டலங்கார ஜீயர் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் ஆணை பழைய கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும் என தவறாக புரிந்து கொண்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்தது. 

இதனையடுத்து, சீரமைப்பு பணிகளுக்கான அனுமதி வழங்குவதா, வேண்டாமா என்பதையும் அரசு மற்றும் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுக்கள் தான் முடிவெடுக்கும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com