முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

வேதாரண்யம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
OS Maniyan
OS Maniyanpt desk

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் வேதரத்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

madras high court
madras high courtpt desk

அந்த மனுவில் 60 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன் வழங்கியும் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதாக புகார் கூறப்பட்டிருந்தது. இதை ஆதாரமற்ற புகார் என்றும், பணப்பட்டுவாடா எதுவும் நடைபெறவில்லை என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டபாணி, வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் பெற்ற வெற்றி செல்லும் என இன்றைய தினம் தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com