தமிழ்நாடு
சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு - 14 பேரின் மனுக்கள் தள்ளுபடி
சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு - 14 பேரின் மனுக்கள் தள்ளுபடி
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 14 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பழைய மாமல்லபுரம் சாலையில் மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து தினகரன்,கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.