அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்; கடும் மோதலுக்கிடையே பரபரப்பான தலைமையகம்

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்; கடும் மோதலுக்கிடையே பரபரப்பான தலைமையகம்
அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்; கடும் மோதலுக்கிடையே பரபரப்பான தலைமையகம்

அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தடை கோரிய வழக்கில், பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளார். 2 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமைச்செயலகம் கலவரப் பகுதிகளாக மாறியுள்ளது.

இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மண்டபத்தின் திடலில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் போல், மின்னணு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்குள் செல்லும் வகையில் நவீன நடைமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்வதை தவிர்க்கும்வண்ணம், ஓபிஎஸ் அதிமுக தலைமையகம் சென்றுள்ளார். அவர் செல்லும் முன்னர், அவர் தலைமையகத்துக்குள் நுழைவதை தவிர்க்க, தலைமையக வாயிலை மறித்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அமர்ந்திருந்தனர். இதனால் அவர்களை அப்புறப்படுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முயன்றனர். இதில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களையும், கற்களுடன் பாட்டில்களையும், கம்புகளையும் வீசி தாக்குதல் வீசிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியே பதற்றத்துடன் இருக்கிறது. தொடர் கலவரத்துக்கு மத்தியில் தலைமையகத்துக்குள் ஓபிஎஸ் சென்றார். இதேநேரத்தில் பொதுக்குழுவுக்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபம் சென்றுள்ளார் ஈபிஎஸ்.

அதிமுக தலைமையகத்தில் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லை என்ற போதிலும், தான் தொண்டர்களை சந்திக்கவே தலைமையகம் செல்வதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் தலைமையகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, தலைமையகம் மூடப்பட்டிருந்தது. இபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியே அதை மறைத்தபடி இருந்தனர். இதைத்தொடர்ந்து தலைமையக பூட்டை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் அவர்களுக்கும் இபிஎஸ் தரப்பினருக்கும் இடையே பெரும் கைகலப்பானது. இந்த கலவரத்திற்கிடையே கட்சி தலைமையகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக கொடியை ஏந்தியவாறு நுழைந்தார் ஓபிஎஸ்.

அதிமுக தலைமையகத்தில் ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டது. கடும் மோதலால் அதிமுக தலைமையகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர மோதல் நடைபெறும் நிலையில் காவலர்களே இல்லாத நிலை இருப்பதால் அப்பகுதியே கலவர பூமியாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com