\
இளைஞர் மர்ம மரணம்: மாரியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

இளைஞர் மர்ம மரணம்: மாரியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

இளைஞர் மர்ம மரணம்: மாரியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Published on

சேலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாரலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பெரிய சேலம் மாவட்டம் வடக்கம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது இருசக்கர வாகனம் மாரியப்பன் காருடன் மோதி கடந்த ஜூன் மாதம் விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, மாரியப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாயமான சதீஷ்குமார், பின்னர் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தீவட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனையடுத்து மாரியப்பன் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்படுவதால் போலீஸ் காவல் வழங்க உத்தரவிடுமாறு மரணமடைந்த சதீஷ்குமாரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாரியப்பன் உள்ளிட்ட மூவரை எதிர் மனு தாரர்களாக சேர்த்து சதீஷ்குமார் தாயார் முனியம்மாள் சார்பில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 12ம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவர்கள் மூவரும் எதிர்மனுதாரர்களாக சேரக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது- இந்நிலையில் இன்று மனுவை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 11-க்குள் மாரியப்பன் பதிலளிக்க உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com