’உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது’ - நீதிமன்றம் வேதனை
60% நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% நேரம் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலுமே அதிகமாக செலவிடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் வேதனை..
நிலத்தை கையப்படுத்தியது தொடர்பான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க அறிவுறுத்தப்பட்ட நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை என சங்கர் ஷா, குமரேசன் என்பவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஜூன் 6 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதற்குபிறகு பேசிய நீதிபதி, 60% நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% நேரம் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலுமே அதிகமான நேரங்கள் செலவிடப்படுவதாகவும், வெறும் 7% நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளதாக ஆதங்கம் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களுக்கு பணி செய்வது தான் அதிகாரிகளின் கடமை என்பதையே அரசு அதிகாரிகள் மறந்து விட்டனர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரி மீதான இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் காட்டமாக தெரிவித்தார்.