\
தங்கலான்
தங்கலான்புதிய தலைமுறை

தங்கலான் படத்தின் OTT வெளியீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் ஒடிடி தளத்தில் தங்கலான் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பொற்கொடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
Published on

வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் ஒடிடி தளத்தில் தங்கலான் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பொற்கொடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில், தங்கலான் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கைச் சான்று அளிக்கப்பட்டு தங்கலான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிவிட்டபின் ஒடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com