சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி

சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி

சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
Published on

சென்னையில் பழமையான கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் காட்சி இன்று நடைபெற்றது.

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் சென்னை, திருவான்மியூரில் நடத்தப்பட்ட பழமையான கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கி வைத்தார். 1920-ல் இருந்து 1970 வரையிலும் புழக்கத்திலிருந்த ஜாக்குவார், எம் ஜி டாட்ஜ் பிரதர்ஸ், செவரலே, ஃபோர்ட், பியுகோ, ஆஸ்டின், மெர்சிடெஸ் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களின் பழங்கால வாகனங்கள் காட்சியில் இடம்பெற்றன.

பழங்கால ஜாம்பவான்கள் பலர் பயன்படுத்திய கார்களும் இடம் பிடித்திருந்தன. சிறந்த பராமரிப்பில் உள்ள வாகனங்கள் பல பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பழமையான கார்களை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com