திருச்சியில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ தொற்று - எச்சரிக்கும் மருத்துவர்கள்

திருச்சியில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ தொற்று - எச்சரிக்கும் மருத்துவர்கள்
திருச்சியில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ தொற்று - எச்சரிக்கும் மருத்துவர்கள்

கடந்த சில தினங்களாக திருச்சியில் மெட்ராஸ் ஐ தொற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. காலநிலை மாற்றத்தின்‌ காரணமாக ‘மெட்ராஸ்‌ - ஐ' எனப்படும்‌ கண்‌ தொற்று நோய்‌ பாதிப்பு தற்‌போது பரவி வருகிறது.

விழியையும்‌, இமையையும்‌ இணைக்கும்‌ ஐவ்வு படலத்தில்‌ ஏற்படும்‌ வைரஸ்‌ தொற்றுதான்‌ 'மெட்ராஸ்‌ - ஐ' எனக்‌ கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள்‌ காற்று மூலமாகவும்‌, மாசு வாயிலாகவும்‌ பரவக்கூடும்‌. அதுமட்டுமன்றி, மெட்ராஸ்‌ - ஐ' பிரச்னையால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ பயன்படுத்திய பொருட்களை உபயோகித்‌தாலும்‌ மற்றவர்களுக்கு நோய்த்‌தொற்று பரவும்‌ என மருத்துவர்‌கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

கண்‌ எரிச்சல்‌, விழிப்‌பகுதி சிவந்து காணப்படுதல்‌, நீர்‌ சுரந்துகொண்டே இருத்தல்‌, இமைப்பகுதி ஒட்டிக்‌ கொள்ளுதல்‌ உள்‌ளிட்டவை மெட்ராஸ்‌ - ஐ-யின்‌ முக்கிய அறிகுறிகளாகும்‌. பொதுவாக ஒரு கண்ணில்‌ 'மெட்ராஸ்‌ - ஐ' பிரச்னை ஏற்பட்‌டால்‌, மற்றொரு கண்ணிலும்‌ அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதற்கு ஒரே தீர்வு பாதுகாப்புடன் இருப்பதுதான்.

மெட்ராஸ்‌ - ஐ' எளிதில்‌ குணப்படுத்தக்கூடிய மிகச்‌ சாதாரணமான நோய்த்‌ தொற்றுதான்‌. ஆனால்‌, அதனை முதலிலேயே கண்‌டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்‌. காலந்தாழ்த்தி அலட்சியம்‌ செய்தால்‌ பார்வையில்‌ தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்‌.

கண்ணில் ஏற்படும் இத்தொற்றால் வயதானவர்களும் சிறு குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் குழந்தைகளுக்கு வரும்பொழுது மற்றவர்களுக்கு இது எளிதாக பரவுகிறது. திருச்சியை பொறுத்தவரையில் தனியார் மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் மெட்ராஸ் தொற்றிக்காக சிகிச்சைக்கு வருவதாக கூறுகிறார் மருத்துவர் வினோத்.

நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் ஓய்வெடுங்கள். அதிகமானால் உடனே மருத்துவரை அணுவது நல்லது. இந்த வைரல் தொற்று வேகமாக பரவும் என்பதால் பள்ளி, அலுவலகங்களில் கவனமாக இருப்பது இருப்பது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com