சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT

கள்ளக்குறிச்சி | விஷ சாராயத்தால் உயிரிழந்தோருக்கான இழப்பீடு | “அரசின் முடிவில் நீதிமன்றம் தடையிடாது”

விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Published on

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் “விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கக் கூடாது, இதுபோன்ற உயிர்பலிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, “அரசின் முடிவில் நீதிமன்றம் தடையிடாது. எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பர நோக்கத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனக்கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
கும்பகோணம் | நீதிமன்றம் வந்த ரவுடியை வேறொரு வழக்கில் கைது செய்த போலீஸ்... காத்திருந்த அதிர்ச்சி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com