\
இயந்திரம் பழுது: ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்களித்த திருமயம் தொகுதி திமுக வேட்பாளர்!

இயந்திரம் பழுது: ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்களித்த திருமயம் தொகுதி திமுக வேட்பாளர்!

இயந்திரம் பழுது: ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்களித்த திருமயம் தொகுதி திமுக வேட்பாளர்!
Published on

வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்களிக்க முடியாமல் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அருகேயே ஒரு மணி நேரமாக காத்திருந்து வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியிலுள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி இருந்தது.

இந்நிலையில், அங்கு முதல் ஆளாக வாக்களிக்க வந்த திருமயம் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி வாக்களிக்க முடியாமல் இயந்திரம் அருகேயே காத்திருந்தார். இதனை அடுத்து அங்குள்ள பணியாளர்கள் இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர். பின்னர் ஒரு மணிநேரம் காத்திருந்த திமுக வேட்பாளர் ரகுபதி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com