கருணாநிதி பிறந்தநாள்: நினைவிடத்தில் மரியாதை செய்த ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலில் மரியாதை செலுத்திய பின்னர் கருணாநிதி நினைவிடம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் திமுகவினரும் மரியாதை செலுத்தினர். பின்னர், 38ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 38மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. 36தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள், நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். இதனை அடுத்து முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

