முதலமைச்சரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
முதலமைச்சரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:  மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவரும் ஆனா மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 40 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ‘என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன்’ எனக் கூறினார். இது குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் தெரிவித்தார். இந்த ஆட்சியில் அனைத்துமே மர்மமாக உள்ளது என தெரிவித்த ஸ்டாலின் நிலைமையை கூர்ந்து கவனிக்கிறோம் எனக் கூறினார். மேலும், அதிமுக தொண்டர்கள் கருத்தை பன்னீர்செல்வம் பிரதிபலித்துள்ளார் என்றும், பன்னீர் செல்வத்தை சசிகலா செயல்படவே விடவில்லை எனவும் ஸ்டாலின் குற்றும் சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com