\
“வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம்” - மு.க.அழகிரி

“வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம்” - மு.க.அழகிரி

“வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம்” - மு.க.அழகிரி
Published on

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என மு.க.அழகிரி கூறியது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதமாக உள்ளது. அதைப்பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, ஓட்டு போடுவதுகூட ஒரு பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரஜினியுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது” எனத் தெரிவித்தார். முன்னதாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com