முதலமைச்சர் உள்பட தமிழக அமைச்சர்கள் 32 பேருக்கு புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக, 32 சொகுசு கார்கள் வாங்கப்பட்டு தலைமைச் செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு சொகுசு வாகனத்தின் மதிப்பு 26 லட்சம் ரூபாய் என்றும், விரைவில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் இவற்றை அமைச்சர்களுக்கு வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதன்பின் அமைச்சர்கள் இந்த காரில் பயணித்து தான் மக்கள் பணியாற்றுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.