தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறையும் வெப்பநிலை: கொடைக்கானலில் நிலவும் உறைபனி

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறையும் வெப்பநிலை: கொடைக்கானலில் நிலவும் உறைபனி
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறையும் வெப்பநிலை: கொடைக்கானலில் நிலவும் உறைபனி

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48மணி நேரத்திற்கு குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், கொடைக்கானலில் தொடரும் கடும் குளிர் காலநிலை மூன்றாவது நாளாக 6 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் கடும் உறைபனிக் காலம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்த பட்சமாக 6 டிகிரி வெப்பம் சராசரியாக பதிவாகியுள்ளது.

அதேபோல் மன்னவனூ ஏரி, கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு அருகே 4 டிகிரி-க்கு கீழ் வெப்பநிலை பதிவாகியும் வருகிறது. அதே வேளையில் சமவெளிப் பகுதிகளில் கடல் போல மூடு பனி மூட்டம் தாழ்வாக நிலை கொண்டு நடுங்கும் குளிரையும் கொடுத்து வருகிறது. கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலை கொண்டுள்ள மூடுபனி மூட்டத்தை, சுற்றுலா பயணிகள் கண்டும் ரசித்தும் வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com