வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்பு.!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்பு.!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்பு.!
Published on

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை உள்ளிட்ட வட தமிழகம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com