காற்றழுத்த தாழ்வு பகுதி
காற்றழுத்த தாழ்வு பகுதிபுதிய தலைமுறை

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; ஃபெஞ்சல் பாதையிலேயே நகரும்! - வானிலை ஆய்வு மையம்!

பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி இருந்தது. இதுதான் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியான வழுவடைந்துள்ளது.
Published on

வரும் 12 ஆம் தேதி இலங்கை - தமிழ்நாடு கடலோர பகுதியை நோக்கி நகரும் என கணிப்பு. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

” கடலோரப்பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம். 11ம் தேதியே தென் மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய இலங்கை தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி இருந்தது. இதுதான் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வழுவடைந்துள்ளது.

வரும் நாட்களில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என்று தெரிவித்துள்ளனர்.இது மேலும், வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பது பின்னர் தான் தெரியவரும் .

காற்றழுத்த தாழ்வு பகுதி
போராடிய விவசாயிகள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள்!காயமடைந்த அவலம்!

ஃபெஞ்சல் புயல் எந்த பாதையில் வந்ததோ அதே பாதையில்தான் காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் பயணிக்கவுள்ளது. இதனால், தமிழகக் கடலோரப்பகுதிகளில் பரவலாக மழையையும் எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com