“சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை
கடலூர் அருகே சகோதர சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடியினர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த சுவதியும், கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. திருமணம் செய்துகொள்ளும் முறையில்லை, சகோதர சகோதரி முறை என்பதால் எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி நேற்று இரவு ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரயில் என்ஜின் ஒட்டுநர் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.