பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி வெள்ளகோவில் பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஈரோடு அடுத்த சூரம்பட்டிவலசு நேதாஜி வீதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் நந்தகுமார். கும்பகோணம் புளியம்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் மகள் சத்யபிரியா. நந்தகுமார்- சத்யபிரியா இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி வந்தனர். பின் அந்த நட்பு காதலாக மாறவே ஆறு மாதத்திற்கு முன்பு ஊட்டியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இவர்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டில் உள்ள வி.ஜ.பி நகரில் தனி வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். யாருடை தொடர்பு இல்லாத நிலையில் திருமணம் செய்து கொண்டதால், நத்தகுமார் மூலனூரில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் நந்தகுமார் வேலைக்கு வராததால், மூலனூர் டீ கடைக்காரர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. இதனையடுத்து கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படததால் ஜன்னல் கதவை திறந்து பார்க்கும்போது, நந்தகுமார் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் வெள்ளகோவில் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தரையில் சத்யபிரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து வெள்ளகோவில் போலீசார் சடலங்களை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.