\
கோயில் குளத்தில் மதுபாட்டில்கள்: வைரலாகும் புகைப்படங்கள்!

கோயில் குளத்தில் மதுபாட்டில்கள்: வைரலாகும் புகைப்படங்கள்!

கோயில் குளத்தில் மதுபாட்டில்கள்: வைரலாகும் புகைப்படங்கள்!
Published on

கோவையில் உள்ள குளத்தை சுத்தப்படுத்தும்போது, அங்கு கிடந்த மது பாட்டில்களை அடுக்கி வைத்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

கோவையை அடுத்த வாலாங்குளம் பகுதியில் தன்னார்வ ஆர்வலர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படும் குளத்தில், குடிமகன்கள் குடித்து வைத்த மது பாட்டில்கள் மட்டுமே குவியல் குவியலாக கிடைத்துள்ளது. 

இதையடுத்து கிடைத்த மது பாட்டிகளை வரிசையாக அரை கிலோ மீட்டர் தூரம் வரை அடுக்கி தன்னார்வ ஆர்வலர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தொடர்ந்து குளங்களில் இதுபோன்ற கழிவுகள் போடப்படுவதால், குளங்கள் மாசுபடுவதாகவும், எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com