அதிமுகவின் நீண்ட கால ஒப்பந்தமே மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம்: செந்தில் பாலாஜி

அதிமுகவின் நீண்ட கால ஒப்பந்தமே மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம்: செந்தில் பாலாஜி
அதிமுகவின் நீண்ட கால ஒப்பந்தமே மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம்: செந்தில் பாலாஜி

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 15 முதல் 20 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது என்று தமிழ்நாடு எரிசக்தி துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்

சட்டப்பேரவையில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் தங்கமணி பேசுகையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் சி.யுஜி ரிப்போர்ட் அதிகமாக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த எரிசக்தி துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “அவசரத் தேவைக்கு தான் குறைந்த காலத்திற்கு கடந்த திமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. மின்பற்றாக்குறை ஏற்படுகிறபோது வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்படுவது வாடிக்கைதான். ஆனால் அதிமுக காலத்தில் நீண்ட நெடுங்காலத்திற்கு 15 ஆண்டு முதல் 25 ஆண்டு வரை ஒப்பந்தம் போட்டு, வருங்காலத்தில் மின்சாரத்தின் விலை குறையும் என்று தெரிந்தும் அதிக விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு நீண்ட ஆண்டுகள் ஒப்பந்தம்  போட்டதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது” என தெரிவித்தார்.

இதனைப்படிக்க: கர்நாடகாவில் சந்தன மரங்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com