பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம்
லாரி உரிமையாளர்கள் இன்று தொடங்கியுள்ள வேலைநிறுத்தம் காரணமாக 4 லட்சம் லாரிகள் வரை இயக்கப்படவில்லை.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததையடுத்து போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, 15 வருடங்களுக்கு மேலான வாகனங்கள் பயன்பாட்டிற்கு தடை உள்ளிட்ட பல பாதகமான அம்சங்கள் திரும்பப்பெறப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இப்போராட்டத்தால் மாநிலம் முழுவதிலும் சுமார் 4 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்றும், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் சுமார் 5 முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கும் என லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தலைமையில் பேச்சுவார்த்தை காலை முதல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டவில்லை.