\
லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு
Published on

திருவள்ளூரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் மாரிமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (35), மனைவி சங்கீதா(30), தனுஜாஸ்ரீ(6), தருண்(3) ஆகியோர் வீரராகவபுரத்தில் இருந்து மாரிமங்கலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சவுடு மண் ஏற்றி செல்வதாக சென்ற டிப்பர் லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இரு சக்கர வாகனம் 50 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றதில் ஜெகதீஷ், தனுஜாஸ்ரீ, தருண் ஆகியோர் உடல்கள் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் அங்கு படுகாயங்களுடன் இருந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com