\
பைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு

பைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு

பைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு
Published on

புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள முதுகுளத்தை சேர்ந்தவர்கள் முருகையன் மற்றும் அவரது மகன் தர்மலிங்கம். இருவரும் கந்தர்வக்கோட்டை சுங்கச்சாவடி அருகே தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டை நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் லாரியை விபத்து நடந்த இடத்தை விட்டு சற்று தூரம் தள்ளி நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை முருகையன் மற்றும் மகன் தர்மலிங்கம் உள்ளிட்ட  இருவரும் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கந்தர்வக்கோட்டை போலீசார் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com