இருசக்கர வாகனத்தில் லாரி மோதல் : புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, புதுப்பெண் படுகாயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடந்த சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணமான மோகன், தனது மனைவி ரமணி மற்றும் நண்பர் ரஞ்சித் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் முள்ளிக்கருப்பூர் கிராமத்தில் இருந்து லால்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர்கள் வந்த இருசக்கர வாகனம், வாளாடி சிவன்கோயில் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று மோதியது. இதில் மூவரும் பலத்த காமடைந்தனர்.
புதுமாப்பிள்ளை மோகன் மற்றும் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரமணி பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். திருமணமான இரண்டே நாட்களில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.