சமயபுரம் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து

சமயபுரம் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து

சமயபுரம் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து
Published on

திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பால தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் கீழே நடந்து சென்றவர் படுகாயம் அடைந்தார்.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, சமயபுரம் டோல்கேட் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானதில், லாரி அந்தரத்தில் தொங்கியது. தடுப்பு சுவரை லாரி வேகமாக இடித்ததில், தடுப்பு சுவரில் இருந்த கல் விழுந்து பாலத்தின் கீழே நடந்து சென்றவர் படுகாயம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com