ஒரே மாதிரி வரி விதிக்க விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை

ஒரே மாதிரி வரி விதிக்க விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை
ஒரே மாதிரி வரி விதிக்க விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் விசைத்தறி தொழிலுக்கு நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்க வேண்டும் என ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு அனைத்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது விசைத்தறிக்கு ரக ஒதுக்கீடு செய்ய வேண்டும், விசைத்தறிக்கு தனி வாரியம் மற்றும் அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நி‌றைவேற்றப்பட்டன. மேலும் மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் விசைத்தறி தொழிலுக்கு மின்னணு பில்லிங் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com