நாடாளுமன்றத் தேர்தல்: 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சீமான்
சீமான்புதிய தலைமுறை

நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மாநிலக் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், இன்று (ஜன.27) அவரது கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

அந்த வகையில் திருநெல்வேலி தொகுதிக்கு பா.சத்யாவையும், தென்காசி தொகுதிக்கு கைலைராஜனையும், கன்னியாகுமரி தொகுதிக்கு மரிய ஜெனிபரையும் அவர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல், பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் ஒவ்வொரு முறையும் தேர்தலைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், இந்த தடவையும் தேர்தலை நாம் தமிழர் கட்சி தனியாகச் சந்திக்கும் எனவும், 40 மக்களவைத் தொகுதிகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com