கனிமொழி To சு.வெங்கடேசன்! தமிழ்நாட்டில் நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்புகளின் விபரங்கள்!

தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலர் இம்முறையும் போட்டியிடுகின்றனர். கடந்த முறை அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து மதிப்பையும் தற்போது தெரிவித்துள்ள சொத்து மதிப்பையும் ஒப்பிடலாம்.
கனிமொழி, திருமாவளவன், தமிழிசை, ஆ.ராசா, சு. வெங்கடேசன்
கனிமொழி, திருமாவளவன், தமிழிசை, ஆ.ராசா, சு. வெங்கடேசன்pt web

தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலர் இம்முறையும் போட்டியிடுகின்றனர். கடந்த முறை அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து மதிப்பையும் தற்போது தெரிவித்துள்ள சொத்து மதிப்பையும் ஒப்பிடலாம்.

ஆ.ராசா - நீலகிரி

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் சொத்து மதிப்பு கடந்த முறை சுமார் 3 கோடியே 29 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 3 கோடியே 73 லட்சமாக அதிகரித்துள்ளது.

தயாநிதி மாறன் - அமைச்சர் சேகர் பாபு - மேயர் பிரியா
தயாநிதி மாறன் - அமைச்சர் சேகர் பாபு - மேயர் பிரியா

தயாநிதி மாறன் - மத்திய சென்னை

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கடந்த முறை 3 கோடியே 65 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது 7 கோடியே 81 லட்சம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

டிஆர் பாலு - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டிஆர் பாலு தனக்கு 10 கோடியே 90 லட்சம் ரூபாய் இருப்பதாக 2019இல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 17 கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார்.

ஜெகத்ரட்சகன் - அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் கடந்தமுறை 13 கோடியே 62 லட்சம் சொத்து இருப்பதாக கூறியிருந்தார். தற்போது 53 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் அசையா சொத்துகள் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.

கனிமொழி - தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு 57 கோடியே 32 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளார். கடந்த முறை தாக்கல் செய்த வேட்புமனுவில் 31 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்

வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் நிலை தெரியவரும் - கார்த்தி சிதம்பரம்
வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் நிலை தெரியவரும் - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் - சிவகங்கை

சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு முன்பு 47 கோடியே 2 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 54 கோடியே 99 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஜோதிமணி - கரூர்

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முன்பு சொத்துகள் மதிப்பு என 60 லட்சத்து 46ஆயிரத்து 55 ரூபாயை குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் என கூறியுள்ளார்

திருமாவளவன் - சிதம்பரம்

சிதம்பரம் எம்பி திருமாவளவனின் சொத்து மதிப்பு 84 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 கோடியே 36 லட்சமாக அதிகரித்துள்ளது தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனின் சொத்து மதிப்பு 3 கோடியே 57 லட்சத்திலிருந்து 9 கோடியே 25 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழிசை - தென்சென்னை

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசையின் சொத்து மதிப்பு கடந்த முறை 2 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 2 கோடியே 17 லட்சமாக உயர்ந்துள்ளது

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் சொத்து மதிப்பு 8 கோடியே 99 லட்சம் ரூபாயிலிருந்து 13 கோடியே 17 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

நயினார் நாகேந்திரன் - நெல்லை

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை 94 கோடியே 90 லட்சம் ரூபாயை சொத்து மதிப்பாக கூறியிருந்த நிலையில் இம்முறை 13 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார்

பொன்.ராதாகிருஷ்ணன் - கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த முறை 7 கோடியே 49 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக கூறியிருந்த நிலையில் இம்முறை 7 கோடியே 63 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார்

விஜய் வசந்த் - கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கியுள்ள காங்கிரசின் விஜய் வசந்த் கடந்த முறை 52 கோடியே 28 லட்சம் ரூபாய் சொத்துகள் இருப்பதாக கூறியிருந்தார். தற்போது 61 கோடியே 90 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் - மதுரை

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது தற்போதையை சொத்து மதிப்பாக ஒரு கோடியே 46 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவரது சொத்து 7.5 லட்ச ரூபாயில் இருந்து ஒரு கோடியே 46 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com