மக்களவைத் தேர்தல் 2024: சேலம் காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின்

சேலம் சந்தையில் முக.ஸ்டாலினின் வாக்குச் சேகரிப்பு பரப்புரை
CM Stalin
CM Stalinpt desk

செய்தியாளர்: மோகன்ராஜ்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சித் தலைவரும் அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி வாரியாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சேலம் வந்துள்ளார்.

CM Stalin
CM Stalinpt desk

இன்று காலை சேலம் ஆற்றோர காய்கறி சந்தை மற்றும் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் நடந்து சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் காய்கறி வியாபாரிகள் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும் டீக்கடை ஒன்றில் அமர்ந்து டீ குடித்த அவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இன்று மாலை வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெறும் திமுக தேர்தல் பரப்புரை பொதுகக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதி மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேச உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com