அதிமுக - திமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !

அதிமுக - திமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !

அதிமுக - திமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !
Published on

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி எந்ததெந்த தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடுகிறது என்பதை அண்மையில் வெளியிட்டது. அத்துடன் இன்று மாலை வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிடவுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் அதிமுக-திமுக நேரடியாக 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அத்துடன் காங்கிரஸ் மற்றும் பாஜக 2 தொகுதிகளில் களம் காணுகின்றன. இதேபோன்று பாமக-விசிக நேரடியாக ஒரு தொகுதியில் மோதுகின்றன.

அதிமுக vs திமுக தொகுதிகள் :

தென் சென்னை 
காஞ்சிபுரம்    
திருவண்ணாமலை 
சேலம் 
நீலகிரி 
பொள்ளாச்சி 
மயிலாடுதுறை 
நெல்லை 

பாஜக vs காங்கிரஸ் தொகுதிகள் :

கன்னியாகுமாரி 
சிவகங்கை 

பாமக vs விசிக தொகுதி :

விழுப்புரம்

உதய சூரியன் மற்றும் மாம்பழம் நேரடியாக மோதும் தொகுதிகள் : 

தருமபுரி 

அரக்கோணம் 

கடலூர் 

மத்திய சென்னை 

திண்டுக்கல் 

திருபெரம்பதூர் 

விழுப்புரம்   (விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். ஆனால் உதய சூரியன் சின்னத்தில்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com