ஒரு விளக்கு எம்.ஜி.ஆர், ஒரு விளக்கு ஜெயலலிதா: சின்னம் பற்றி ஓபிஎஸ்

ஒரு விளக்கு எம்.ஜி.ஆர், ஒரு விளக்கு ஜெயலலிதா: சின்னம் பற்றி ஓபிஎஸ்

ஒரு விளக்கு எம்.ஜி.ஆர், ஒரு விளக்கு ஜெயலலிதா: சின்னம் பற்றி ஓபிஎஸ்
Published on

அதிமுக புரட்சிதலைவி அம்மா அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர், மற்றொரு விளக்கு ஜெயலலிதா என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். எங்களது தேர்தல் சின்னம், மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர் மற்றொரு விளக்கு ஜெயலலிதா என அவர் தெரிவித்தார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் எனவும் அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com