\
லாக்டவுன் தகவலில் உண்மையில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர்

லாக்டவுன் தகவலில் உண்மையில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர்

லாக்டவுன் தகவலில் உண்மையில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர்
Published on

லாக்டவுன் தகவலில் உண்மையில்லை என மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் “சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வருவதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது.

சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது. சென்னையில் சராசரியாக 350க்கு மேல் பாதிப்பு இருக்கிறது. லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com