\
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்
Published on

திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வில் கலந்து கொள்ள சங்கரன்கோயில் செல்வதற்காக வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ராஜபாளையத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கி இருந்தார்.

இதையடுத்து இன்று காலை தென்காசி மாவட்டத்திற்கு புறப்பட்ட அவருக்கு காவல்துறையினர் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. மரியாதையை ஏற்றுக் கொண்ட அவரிடம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு...

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com