\
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு முதல் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் வரை ! #Topnews

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு முதல் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் வரை ! #Topnews

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு முதல் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் வரை ! #Topnews
Published on: 

27 மாவட்டங்களில் நடந்த மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் தலா 13 இடங்களை கைப்பற்றும் அதிமுக, திமுக. சிவகங்கையில் இரு கட்சிகளும் தலா 8 இடங்கள் பெற்றதால் இழுபறி.

தேர்தல் நடைபெற்ற 314 ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி. 95 இடங்களை வென்ற‌ அமமுக இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக மக்களின் அன்பை மீண்டும் பெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை.

தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை மீறி மகத்தான வெற்றி. எத்தகைய அராஜகத்தையும் முறியடிக்கும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இன்றும் நாளையும் சிறப்பு முகாம். தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு.

குடியுரிமை சட்டத்தை எத்தனை கட்சிகள் எதிர்த்தாலும் ஒரு அங்குலம்கூட அரசு பின்வாங்காது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்.

ஈராக்கில் அமெரிக்க படைகள் மீண்டும் நடத்திய தாக்குதலில் 6பேர் உயிரிழப்பு. போரை நிறுத்தவே ஈரான் ராணுவ அதிகாரி சுலைமானி கொல்லப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் பேச்சு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com