\
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி
Published on: 

தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளரிளிடம் பேசிய எஸ்பி வேலுமணி, உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டது என்று கூறினார். நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதால் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

முன்னதாக, நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com