\
உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

ஜூலை மாதத்திற்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்குகள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் பி.குமார்,‌ வாக்காளர் பட்டியல் இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதால், தேர்தல் குறித்து அறிவிப்பாணை வெளியிட முடியாது என தெரிவித்தார். 
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமாரசாமி, வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து பிரமாண பத்திரத்தை கட்டாயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதிலளித்தார். திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com