தமிழ்நாடு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மாநிலத் தேர்தல் ஆணையர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மாநிலத் தேர்தல் ஆணையர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இன்று காலை தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி கிராமப்புற ஊராட்சித் தேர்தலுக்கான தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 27, டிசம்பர் 30 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, ''மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை என்றும், விரைவில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.