🔴 LIVE | மிரட்டும் மிக்ஜாம் புயல்! உடனுக்குடன் விவரம் தெரிய இணைந்திருங்கள்... தொடர் நேரலை!

மிக்ஜாம் புயல் தீவரமாக வலுப்பெறும் எனக்கூறப்படும் நிலையில், சென்னை உட்பட 3 மாவட்டங்களில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், வடதமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு, புயல் எச்சரிக்கை விடப்பட்ட 3 மாவட்டங்களில் மின்தடையோ மின்சார பாதிப்போ ஏற்பாடாத வகையில் கூடுதல் நேரம் பணியாற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்துவருகிறது.

நாளை காலை 8.30 வரை கனமழை நீடிக்கும்!

மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக 3 மாவட்டங்களில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல்: அடுத்த 12 மணிநேரத்திற்கு இந்த 3 மாவட்டங்களில் அதிகனமழை!

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் அதிகனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் புயம்! எங்கே கடக்கிறது?

இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி மிக்ஜாம் புயல் சென்னையிலிருந்து 210 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தென்கிழக்கு திசையில் நகர்ந்து வரும் புயல் மணிக்கு 8கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் இன்னும் தீவிரம் அடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல்

டிசம்பர் 5-ம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர்-மசூலிப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே, மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் புயல்தொடர்பான நொடிக்கு நொடி தகவலையும் விவரங்களையும் பெற, செய்தியின் தொடக்கத்தில் உள்ள புதியதலைமுறையின் நேரலை வீடியோவை பாருங்கள்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com