அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை - யார் யாருக்கு சிலைகள்?

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை - யார் யாருக்கு சிலைகள்?
அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை -  யார் யாருக்கு சிலைகள்?

தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அப்துல் கலாம் போன்ற தலைவர்களுக்கும் சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளர்

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் சிலைகள் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும்முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலும் சிலை நிறுவப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியிலும் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். பத்திரிகையாளர் நலன் காக்க வாரியம், பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கான உதவித் தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com