முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு இரண்டாவது இடம்

முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு இரண்டாவது இடம்
முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு இரண்டாவது இடம்

நாட்டிலேயே முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, இறப்பு விகிதம் குறைந்துள்ளதால் நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சதவிகிதமாக உள்ளது. அடுத்ததாக தமிழ்நாட்டில் முதியவர்களின் அளவு 13.6 சதவிகிதமாகவும், இமாச்சலில் 13.1 சதவிகிதமாகவும், பஞ்சாப்பில் 12.6 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 12.4 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அங்கு பொருளாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் எனவும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதும் காரணம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com