மறக்க முடியுமா கருணாநிதியை...!

மறக்க முடியுமா கருணாநிதியை...!

மறக்க முடியுமா கருணாநிதியை...!
Published on

* தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாவாக கோலோச்சும்போது, கருணாநிதிக்கு 500 ரூபாய் ஊதியம் தந்தது மார்டன் தியேட்டர்ஸ். அப்போதைய காலகட்டத்தில் சிவாஜியின் மாத ஊதியம் 250 ரூபாயாக இருந்தது. அதன் மூலம் வசனகர்த்தாவின் நட்சத்திர அந்தஸ்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர் கருணாநிதி. அதோடு, தமிழ்த்திரை வரலாற்றிலேயே முதன்முறையாக பாட்டுப் புத்தகங்கள் போல, கதை-வசன புத்தகங்கள் பராசக்தி படத்துக்கு வெளியாகின.

* கருணாநிதி தனது வலது கை மோதிர விரலில் நீண்டகாலமாக பவளக்கல் மோதிரம் அணிந்து வருகிறார். அது அண்ணா அணிவித்த மோதிரம். அது தற்போதுவரை அவரை விட்டு நீங்காமல் இருக்கிறது. ஆனால், இதுவரை தங்கச் சங்கிலியை அவர் அணிந்ததில்லை.

* தமிழக வரலாற்றில் அதிக இடங்களை வென்று ஆட்சியமைத்தது திமுகதான். கருணாநிதி தலைமையில், 1971ம் ஆண்டு தேர்தலில் 182 இடங்களில் திமுக வென்றது. அதேபோல, அதிக இடங்களோடு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததும் திமுகதான். 2016ம் ஆண்டு தேர்தலில் 89 இடங்களில் வென்று, வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அதேபோல, நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வரலாறும் கருணாநிதியையே சாரும்.

* கருணாநிதி தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறுவயதில் கருணாநிதிக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது கிரிக்கெட் அல்ல; ஹாக்கிதான். திருவாரூர் ஃபோர்டு ஹைஸ்கூலில் ஹாக்கி டீமுக்காக மாவட்ட அளவில் விளையாடியிருக்கிறார்.

* கருணாநிதியை ஆண்டவரே என்றுதான் எம்ஜிஆர் அழைப்பார். ‘முனாகானா’ என்றுதான் நடிகர் சிவாஜி அழைப்பார். ஆனால், கருணாநிதியின் குடும்பத்தில் மனைவி, மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் வரை அனைவருமே கருணாநிதியை தலைவர் என்றுதான் அழைப்பார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com