அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருட்கள் என்னென்ன? தயாராகிறது பட்டியல்

அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருட்கள் என்னென்ன? தயாராகிறது பட்டியல்
அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருட்கள் என்னென்ன? தயாராகிறது பட்டியல்

அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து வைக்கப்பட்ட சீல், இன்று வருவாய் துறை மூலமாக அகற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் அலுவலக பணியாளர்கள் தங்களது பணியை மேற்கொண்டனர். அப்போது பல பொருட்களை காணவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.என்னென்ன பொருட்கள் காணவில்லை என்பதை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அலுவலக மேலாளர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியல் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்படும் என அவர் கூறினார்.

அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தது முதல் அவர் மரணித்தது வரை அவருக்கு வழங்கப்பட்ட பல பரிசுப் பொருட்கள் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com