தமிழ்நாடு
டாஸ்மாக்கில் நேற்று ரூ. 426.24 கோடிக்கு மது விற்பனை
டாஸ்மாக்கில் நேற்று ரூ. 426.24 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ. 426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளைமுதல் 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
அதில், நேற்று சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடி, மதுரையில் ரூ.87.20 கோடி, சேலத்தில் ரூ.79.82 கோடி, கோவையில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.