\
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு
Published on

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி அரசும் ஊரடங்கை அமல்படுத்தியது. ஊரடங்கு அமலில் இருப்பதால் 50 நாட்களுக்கு மேலாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com