வண்டலூர் பூங்காவில் கொரோனா அறிகுறியுடன் பெண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் பூங்காவில் கொரோனா அறிகுறியுடன் பெண் சிங்கம் உயிரிழப்பு
வண்டலூர் பூங்காவில் கொரோனா அறிகுறியுடன் பெண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தாம்பரத்தை அடுத்த, வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா 2 வது அலை காரணமாக கடந்த மாதம் பூங்கா மூடப்பட்டது. இப்பூங்காவில் வெள்ளைப்புலிகள், வங்கப்புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள், காண்டாமிருகம், நீர்யானை உள்ளிட்ட முக்கிய விலங்குகள் உள்ள பகுதிகளில் பூங்கா நிர்வாகம் கண்காணிப்பு (சி.சி.டி.வி.) கேமராக்களை பொருத்தி அதில் பதிவாகும் காட்சியில் விலங்குகளின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

அப்படி கண்காணிக்கும் போது கடந்த வாரம் நீலா என்ற 9 வயது சிங்கத்தின் நடவடிக்கையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்ட நிலையில் சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் அந்த சிங்கம் இறந்துள்ளது. இதையடுத்து, சிங்கத்தின் சடலத்தின் மாதிரிகளை, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வில், கொரோனா தொற்று காரணமாகவே, சிங்கம் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து 11 சிங்கங்களுக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பது சிங்கங்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிங்கங்கள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளன. இதனைத்தொடர்ந்து மற்ற விலங்களிடம் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் அந்த விலங்களுக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com