தமிழ்நாடு
தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசான மழை - வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசான மழை - வானிலை மையம்
தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜி.பஜார், தேவாலா பகுதிகளில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, மானாமதுரை மற்றும் காரைக்காலில் நேற்று வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரான்ஹீட் அளவை தாண்டி பதிவாகியது.