\
கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் - ராதாகிருஷ்ணன்

கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் - ராதாகிருஷ்ணன்

கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் - ராதாகிருஷ்ணன்
Published on

கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் மருத்துவமனையில் 24 வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ''மலேசியா, ஹாங்காங் பகுதிகளில் கொரோனா கடுமையாக அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகிவருகிறது.

கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதற்கு நாம் முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனாவை முற்றிலும் ஒழிக்க 2 தவணை தடுப்பூசி அவசியம். தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்'' என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com