அமெரிக்காவின் டிஸ்னி பார்க் போல சென்னையிலும் ’தீம் பார்க்’ - தமிழ்நாடு சுற்றுலாதுறை அறிவிப்பு

100 ஏக்கர் பரப்பரப்பில் தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது
அமெரிக்காவின் டிஸ்னி பார்க்
அமெரிக்காவின் டிஸ்னி பார்க்PT

அமெரிக்காவிலுள்ள டிஸ்னி தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழக சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

தனியார் பங்களிப்புடன் ஐந்தாண்டில் இதை செயல்படுத்த தமிழக சுற்றுலா துறை முடிவு திட்டமிடப்பட்டுள்ளது

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போன்ற சர்வதேச அளவில் சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பரப்பில் தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை இன்று வெளியிட்டார்.

தீம் பார்க் என்பது பெரிய பொழுதுபோக்கு மையமாகும். இதில் அட்வென்சர் ரைடிங், குழந்தைகளுக்கு விளையாட்டுகள், குழந்தைகள் விளையாட பொழுதுபோக்குப் பூங்காக்கள்,செய்கை நீர்வீழ்ச்சி, சர்வதேச அளவில் கண்காட்சிகள் விளையாட்டு அரங்குகள் என தீம் பர்கில் அமைக்கப்பட உள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com